கோலிக்கு விளையாட தடை?! ஆபத்தில் இருக்கும் கோலிக்கு ஐசிசி எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியின் போது, ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதாக லெவல் 1 பிரிவில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும் ஒரு குறைபாடு புள்ளியையும் பெற்றுள்ளார்.

வீரர்கள் மற்றும் வீரர்களின் துணை பணியாளர்களுக்கான ஐ.சி.சி நடத்தை விதிகளின் 2.12 வது பிரிவை கோலி மீறியதாகக் கண்டறியப்பட்டது. இந்த விதியின் படி “ சர்வதேச போட்டியில் ஒரு வீரர்,  வீரர்களின் துணை பணியாளர்கள், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபருடனும் (பார்வையாளர் உட்பட) தேவையற்ற உடல் தொடர்பு ( முட்டல், மோதல் ) தொடர்பானது. 

இது தவிர, கோலியின் பெயரில் குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாகும்., செப்டம்பர் 2016 இல் திருத்தப்பட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது மூன்றாவது முறையாகும். 

15 ஜனவரி 2018 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பிரிட்டோரியா டெஸ்டின் போதும், ஜூன் 22 அன்று நடந்த ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் தலா ஒரு டிமெரிட் புள்ளி பெற்ற பின்னர் கோலி இப்போது மூன்றாவது குறைபாடு புள்ளிகளை பெற்றுள்ளார். 

இந்தியாவின் பேட்டிங் இன்னிங்ஸின் போது ஐந்தாவது ஓவரில், ஒரு ரன் எடுக்கும் போது கோலி பந்து வீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸுடன் இடித்து கொண்டு ஓடினார். சாதாரணமாக பார்க்கும் போதே அது விதிகளை மீறியது என்பது தெரிய வந்தது. மேலும் கோலி இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன்மொழிந்த தண்டனையை கோலி ஏற்றுக்கொண்டார், இதன்காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

களத்தில் நடுவர்களாக இருந்த நிதின் மேனன் மற்றும் சி கே நந்தன், மூன்றாவது நடுவர் அனில் சவுத்ரி மற்றும் நான்காவது அதிகாரி செட்டிஹோடி ஷம்ஷுதீன் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலை 1 மீறல் நடைபெறும் போது, அதிகாரபூர்வ எச்சரிக்கை, குறைந்தபட்ச அபராதமாக ஒரு வீரரின் போட்டி கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு குறைபாடு புள்ளிகள் கொடுக்கப்படும். 

ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடு புள்ளிகளை பெரும் போது, ​​அவை இடைநீக்க புள்ளிகளாக மாற்றப்பட்டு ஒரு வீரர் விளையாட தடை செய்யப்படுவார். ஒரே நேரத்தில் இரண்டு புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி 20 ஐகளுக்கான தடை கிடைக்கும். எது முதலில் வருகிறதோ அதனை அந்த வீரர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஒரு வீரர் அல்லது வீரர்களின் துணை பணியாளர்களின் பெயரில் பதிவான புள்ளிகள் அவை விதிக்கப்பட்டதிலிருந்து இருபத்தி நான்கு (24) மாதங்கள் ஆன பிறகு நீக்கப்படும். 

ஜனவரி மாதம் வரையில் அவர் இன்னும் ஒரு புள்ளியை பெறாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர் தடையை சந்திக்க வேண்டியிருக்கும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC warning to indian Captain kohli for his inappropriate physical contact


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->