ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு.! இந்தியாவை பழிவாங்கிய தென் ஆப்ரிக்கா.! மீண்டும் முதலிடம் பிடித்த நாடு.! - Seithipunal
Seithipunal


ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நியூசிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்திருந்தது.

பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. இதனால் தொடரையும் இழந்தது. 

இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவதாக 117 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி இடம்பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி உள்ளது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

99 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா அணி 5வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 6வது இடத்திலும் உள்ளது. மேலும், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC TEST RANKING JAN 22


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->