ஐ.சி.சி., தரவரிசை பட்டியல்.! சீறிய சிராஜ்., 13க்கு 13 ரிஷப் பண்ட்.! 21க்கு 47 சுப்மான் கில்.! - Seithipunal
Seithipunal


ஐ.சி.சி., (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி, பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் 891 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 878 புள்ளிகளுடன் 4-வது இடத்தில இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 3-வது இடத்தில இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 8 புள்ளிகளை இழந்து 862 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கடைசி டெஸ்டில் 89 ரன் எடுத்த இந்திய இளம்வீரர் ரிஷாப் பண்ட் 13 இடங்கள் முன்னேறி 13-வது இடம் பெற்றுள்ளார். கடைசி டெஸ்ட்டில் 91 ரன்கள் குவித்த சுப்மான் கில் 21 இடங்கள் உயர்ந்து 47-வது இடத்தை பிடித்துள்ளார்.

புஜாரா 7
அஜிங்யா ரஹானே 9
ரோகித் சர்மா 18
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 5-வது இடத்தை பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 3-வது இடத்திலும் உள்ளனர். 

இந்தியாவின் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா முறையே 8, 9-வது இடங்களை வகிக்கிறார்கள். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 32 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC TEST RANKING JAN 21


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->