ஐசிசி டி20 பவுலிங் தரவரிசை பட்டியலில் முன்னேறிய தமிழக வீரர்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்த நிலையில் வரும் 17ஆம் தேதி டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாட உள்ளது. நடந்து முடிந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சார்ந்த பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்று இருந்தார்.

இந்த டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் விளையாடிய அவர் முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்து. இரண்டாவது போட்டியில் 35 ரன்களும், மூன்றாவது போட்டியில் 32 ரன்களையும் கொடுத்திருந்தாலும், கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் ஃபின்ச் மற்றும் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில், 614 புள்ளிகளைப் பெற்று சர்வதேச டி20 போட்டிகளுக்கான பவுலிங்  தரவரிசை பட்டியலில் முதல் முறையாக 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 10 இடங்களை நேரடியாக முன்னேறி எந்த இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 21 விக்கெட்டுகளை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc t20 bowling ranking washington sundar 11 places


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->