இந்தியாவிற்கு தடை கேட்ட பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசிய சர்வதேச கவுன்சில்!  - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரானது சமநிலையில் உள்ளது. இந்தப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. 

இந்த போட்டியின் போது இந்திய வீரர்கள் அண்மையில் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ராணுவ வீரர்களின் தொப்பியை அணிந்து விளையாடினார்கள். அந்தப் போட்டியில் தங்களுது ஊதியத்தை தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்குவதாக அறிவித்தார்கள். 

நல்லெண்ணத்தில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் கடுமையாக குற்றம் சாட்டியது. இது என்ன விளையாட்டா? அரசியலா? என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்து, ஐசிசி க்கு புகார் அளித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் அமைச்சர், வீரர்கள் என அனைத்து தரப்பினரும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு புகார் அனுப்ப சர்வதேச கிரிக்கெட் வாரியம் இதற்கு பதில் அளித்ததுள்ளது. 

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களிடம் அனுமதி வாங்கியதாகவும், ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அணிந்து கொள்வதில் எவ்வித தவறும் இல்லை எனவும், அனுமதி பெற்ற பிறகுதான் இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்திய அணிக்கு தடை  கேட்ட பாகிஸ்தானின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது ஐசிசி. 

English Summary

ICC SAID INDIA ALREADY GOT PERMISSION


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal