2022 ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்த ஐசிசி.. ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே தேர்வு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் அணியை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில் 2022 ஆம் ஆண்டுக்கான டி20 அணியில் 3 இந்திய வீரர்களும் (விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா), ஒரு நாள் அணியில் 2 வீரர்களும் (ஸ்ரேயாஷ் ஐயர்,முகமது சிராஜ்), டெஸ்ட் அணியில் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணி;

ஜோஸ் பட்லர் (கே&வி.கீ) (இங்கிலாந்து), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), விராட் கோலி (இந்தியா), சூர்யகுமார் யாதவ் (இந்தியா), க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்த்திக் பாண்ட்யா (இந்தியா), சாம் கரன் (இங்கிலாந்து), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஹாரிஸ் ராப் (பாகிஸ்தான்), ஜோசுவா லிட்டில் (அயர்லாந்து).

2022ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் அணி;

பாபர் அசாம் (கே) (பாகிஸ்தான்), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஷாய் ஹோப் (மேற்கிந்திய தீவுகள்), ஷ்ரேயாஸ் ஐயர் (இந்தியா), டாம் லாதம் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), மெஹிதி ஹசன் மிராஸ் (வங்காளதேசம்), அல்சாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா).

2022ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணி;

பென் ஸ்டோக்ஸ் (கே), உஸ்மான் கவாஜா, கிரேக் பிராத்வைட், மார்னஸ் லாபுஷாக்னே, பாபர் ஆசம், ஜானி பேர்ஸ்டோவ், ரிஷப் பந்த் (வி.கே.), பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, நாதன் லியோன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Mens team of the year 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->