தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது லீக் ஆட்டத்திலும் தமிழக அணி வெற்றி !! - Seithipunal
Seithipunal


தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது லீக் ஆட்டத்திலும் தமிழக அணி வெற்றி வாகை சூடியது.

சென்னையில் நடந்து வரும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 41 அணிகள் கலந்துகொள்கின்றன.

தமிழக அணி தனது முதல் போட்டியை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியுடன் மோதியது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் ஷாஹித் ஹாக்கி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், தமிழக அணி வீரர் ஜோஷ்வா, மணிகண்டன், செல்வராஜ், ராயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், 4-2 என்ற கணக்கில் தமிழக அணி, மத்திய தொழில்துறை பாதுகாப்பு அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது. 
 
தமிழக அணி தனது இரண்டாவது  போட்டியில் அசாம் அணியுடன் மோதி 13-1 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜி பிரிவில் தமிழக அணி முதலிடம் பெற்றது. தமிழக வீரர்கள் ராயர் 4 கோல், தாமு, செல்வராஜ், ஜோஷ்வா, மணிகண்டன் தலா 2 கோல் அடித்தனர்.
 
இந்நிலையில், சென்னையில் இன்று நடந்த தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது லீக் ஆட்டத்திலும் தமிழக அணி வெற்றி பெற்றது. எழும்பூரில் நடைபெற்ற போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை தமிழக அணி வீழ்த்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hockey champions trophy Chennai Win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->