டோனியின் சாதனையை தூக்கி சாப்பிட்ட ஹெட்மேயர்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் போது மூன்றாவதாக களமிறங்கிய வெஸ்ட் வீரர் ஹெட்மயர் வான வேடிக்கையினை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார். 

இவருக்கு தற்போது 26 வயது ஆகும் நிலையில்., நேற்றைய ஆட்டத்தின் போது 106 பந்துகளில் 139 ரன்கள் குவித்திருந்தார். மொத்தமாக 11 பவுண்டரிகளும்., 7 சிக்ஸர்களும் மொத்தமாக அடித்து நொறுக்கினார். 

இது 41 ஆவது ஒரு நாள் போட்டியில் 5 ஆவது சதமாக ஹெட்மேயருக்கு அமைந்த நிலையில்., 139 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். தனது சேஸிங்கின் மூலமாக அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார். 

இந்த சாதனை இதற்கு முன்னதாக கடந்த 1999 ஆம் வருடத்தில் ரிக்கார்டோ போர்வெல் 124 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது ஹெட்மேயர் முறியடித்துள்ளார். 

இதுமட்டுமல்லாது இந்தியாவில் வெற்றிகரமான சேசிங் மற்றும் அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரராக இடம்பெற்றுள்ளார். கடந்த 1997 ஆம் வருடத்தில் ஜெயசூர்யா 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன்கள் குவித்து டோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

head mayer is equal to dhoni old sucess


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->