நாளை முதல் போட்டி! இந்திய வீரர்கள் இருவர் அணியில் இருந்து நீக்கம்! ரசிகர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது நாளைக் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் விமர்சனத்துக்கு உள்ளானார்கள். இதனையடுத்து அவர்கள் குறைந்தபட்சம் இரண்டு போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ தலைவர் வினோத் ராய் பரிந்துரை செய்திருந்தார். 

இந்நிலையில் தற்போது நாளை தொடங்க இருக்கும் தொடரில் கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா பங்கேற்க மாட்டார்கள் எனவும் மேலும் விசாரணை நடத்திய பிறகு அவர்களுக்கான தண்டனை விவரம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் ரிசர்வ் வீரராக தான் உள்ளார். ஆனால் ஹர்டிக் பாண்டியா ஆல்ரவுண்டர் பங்கு முக்கியமாக இருக்கும் நிலையில் அவரை நீக்கியுள்ளது அணியில்  பின்னடைவாக கருதப்படுகிறது

English Summary

hardik pandya kl rahul ruled out of Australia series


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal