ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்டிக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தல்!  - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 க்கு 1 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் இன்று கடைசி மற்றும் இறுதிப் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களை அடித்து கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 13 பந்துகளில் 6 ரன்களை  மட்டுமே அடித்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதேபோல் அடுத்து களமிறங்கிய புதுமுக வீரர் சுப்மன் கில் கடந்த போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் ஏமாற்றம் அளித்து 7 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியில் இந்திய அணி தடுமாறியபோது காப்பாற்றுவதற்கு தோனி இல்லை என அனைவரும் கூறிய நிலையில்,  17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற  இக்கட்டான சூழ்நிலையில் தோனி களமிறங்கினார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் பவுல்ட்டின் அசத்தலான இன்ஸ்விங்கரில் கிளீன் போல்டாகி 1 ரன்களில்  வெளியேறினார். 

முன்னணி வீரர்கள் தவிக்க விட்டு போன இந்திய அணியை தமிழகத்தின் விஜய் சங்கரும் அம்பத்தி ராயுடுவும் தூக்கி நிறுத்தினர்கள். பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்த இந்த ஜோடி மிக சிறப்பாகவிளையாடி இருவரும் அரை சதத்தை நோக்கி முன்னேறிய நிலையில் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்ற நிலை இருக்கும் போது அணி 116 ரன்கள் எடுத்திருந்த போது அம்படி ராயுடுவின் அலட்சியத்தால் விஜய் ஷங்கர் தன்னுடைய விக்கெட்டை ரன் அவுட்டில் பறிகொடுத்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் சங்கர் 45 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 

அதன் பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் அமைதியாக ஒன்று இரண்டு ரன்களாக ஆட அதுவரை மிகவும் பொருமையாக ஆடிவந்த ராயுடு பவுண்டரி சிக்ஸர்களாக அடிக்க தொடங்கினார். நல்ல நிலையை நோக்கி முன்னேறிய நிலையில் 90 ரன்கள் எடுத்திருந்த போது ராயுடு ஆட்டமிழந்தார். சற்று நேரத்தில் கேதார் ஜாதாவும் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அம்பத்தி ராயுடு ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஹர்டிக் பாண்டியா முதல் ஆறு பந்துகளை நிதானமாக ஆடிக்கொண்டார்.  47வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் டூத் அஸ்லே பந்து வீச்சில் இரண்டாவது மூன்றாவது நான்காவது பந்துகளில் சிக்ஸர் விளாசி மீண்டும் ஒருமுறை ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இது ஒரு நாள் போட்டிகளில் ஹாட்ரிக் பாண்டியா அடிக்கும் நான்காவது ஹாட்ரிக் ஆகும். அதோடு இல்லாமல் அடுத்த ஓவரில் வேகப்பந்து வீச்சாளர்கள் போல்ட், நீஷம் வீசிய பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். நீஷம் ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசிய அவர் டிரண்ட் போல்ட்டின் அபார கேட்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 22 பந்துகளில் 45 ரன்களை குவித்ததால் இந்திய அணி 250 ரன்கள் என்ற இலக்கை கடந்தது. அவர் இரண்டு பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் விளாசியது குறிப்பிடத்தக்கது. 

 49.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது.  நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.  இந்த ஆட்டத்தில் சிறப்பாக அதிரடியாக விளையாடிய பாண்டியா  நியூசிலாந்து மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக்கிற்கு பிறகு ஒருநாள் போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்கொண்ட வீரர் என்ற சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் அவர் அடித்துள்ள அனைத்து ஹாட்ரிக் சிக்ஸர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சில் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik Pandya hit 4th hatrik sixes in odi


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal