சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி"... ஹர்பஜன் சிங் ட்வீட்! - Seithipunal
Seithipunal


சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். 

சென்னைக்கு தற்போது உள்ள அடையாளங்களை வைத்து இன்றைய நாள் கொண்டாடப்படும் நிலையில், சென்னைக்கு சொந்தக்காரரான சென்னப்ப நாயகர் குறித்து பலருக்கும் தெரியவில்லை.

சென்னப்ப நாயகரின் மகன்களான வந்தவாசியை தலைமையிடமாக கொண்டு ஆண்ட தாமல் வேங்கடப்பா நாயகர் மற்றும் பூந்தமல்லியை தலைமையிடமாக கொண்டு ஆண்ட தாமல் அய்யப்ப நாயகர் என்ற இரு சகோதர்களிடம் இருந்து ஆகஸ்ட் 22 நாள் 1639 வருடம் பிரட்டிஷ் காரர்கள் ஒப்பந்தம் மூலம் சென்னையை பெற்ற தினமே சென்னை தினம் என கொண்டாடப்படுகிறது.

சென்னை தினத்தை ஒட்டி பலரும் வாழ்த்துக்ளை தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கலீஜ்,டௌலட்,பிசுக்கோத்,நைனா, ஓசி,பிஸ்து,அட்டு,பேஜார், அள்ளு,தல,மாமி,மாமே,இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க.ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க. சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி" என்று பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harbhajan singh tweet in chennai day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->