நேற்றையை போட்டியில் புதிய சாதனை படைத்த ஹர்பஜன் சிங்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

எலிமினேட்டர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் மோதியது. அந்த ஆட்டத்தில் டெல்லி அணி வென்றதால் சன் ரைசர்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது. 

இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இதில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி முனைப்புடன் களமிறங்கியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. 

இதனையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான டு பிளசிஸ், ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி ரசிகர்களை உற்சாக படுத்தினர். சென்னை அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டி மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் ஹர்பஜன் சிங் இணைந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து  முதல் இடத்தில் உள்ளார், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங் இருவரும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harbhajan singh ipl match 150 wickets


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->