பேரதிர்ச்சியில் கோமதி.. கையில் எடுக்கப்பட்ட 'பி' மாதிரி - அவசர அவசரமாக கத்தார் விரைவு.! - Seithipunal
Seithipunal


கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசியத் தடகள தொடரின் மகளிர்  800 மீ ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.

தடகள உலகின் சம்பிரதாய சோதனையான ஊக்க மருந்து பரிசோதனை கோமதிக்கு நடத்தப்பட்டது.

முதல் கட்டமான “ஏ” மாதிரி சோதனையில் கோமதி நான்ட்ரோலோன் என்கிற ஸ்டீராய்ட் மருந்தை உட்கொண்டிருப்பது தெரிய வந்ததால் அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

ஊக்கமருந்து சோதனை முடிவைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோமதி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்நிலையில், இந்த பிரச்சனையை எதிர் கொள்ள கத்தார் சென்றுள்ள கோமதி தன்னிலை விளக்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஏதேதோ பெயர்களில் ஊக்க மருந்து இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தனக்கு ஊக்கமருந்து என்றால் என்ன வென்றே எனக்குத் தெரியாது.

அந்தப் பெயர்களை எல்லாம் தான் கேள்விப்பட்டதே இல்லை. தற்போது டோப் டெஸ்டின் அடுத்தபடியான “பி” மாதிரி சோதனைக்காக கத்தார் வந்துள்ளேன்.

”பி” மாதிரி சோதனையில் வெற்றி பெற்று, தன் மேல் குற்றமில்லை என்பதை நிரூபிக்கும் வரை தான் ஓயப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“ஏ” மற்றும் “பி” மாதிரி சோதனைகள்  இரண்டுமே ஒரே அடிப்படை சோதனைதான். இரண்டு முடிவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

மாற்றம் ஏதும் ஏற்படாது.”ஏ” மாதிரி சோதனையில் குளறுபடி ஏதேனும் இருந்தால் “பி” மாதிரி சோதனை சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gomathi Marimuthu Responds to DOPE test Result


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->