கண்ணீர்விட்டு கதறி அழுத கத்தார் நாட்டில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து.! காரணம் இது தான்.! - Seithipunal
Seithipunal


கத்தார் நாட்டின் தோஹாவில் 23வது ஆசிய தடகள போட்டி ஏப்ரல் 22ல் நடைபெற்றது. இதில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இந்தியா வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடத்தில் கடந்து நாட்டுக்கு முதல் தங்கப்பதங்கத்தை வென்று தந்துள்ளார்

மிகவும் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் இருந்து வந்த கோமதி மாரிமுத்துவின் வெற்றியை அரசியல் தலைவர்களும், பொதுமக்களும், பொது வெளி மற்றும் சமூக வலைதளம் என அனைத்திலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் 

கத்தாரில் தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்து தனியார் பள்ளி நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கோமதி நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக என் தந்தை மாட்டுக்கு வைக்கும் உணவைக்கூட சாப்பிட்டிருக்கிறார். அப்பா, உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார் என தங்க மகள் கோமதி மாரிமுத்து அவர் தந்தை குறித்த நெகிழ்ச்சியாக பேசினார்

`பயிற்சிக்கு அடித்தளமே மைதானம்தான். அப்படியான மைதானமே இல்லாமல் தடகளத்தில் தங்கம் வெல்வதில் உள்ள சிரமத்தை நம்மால் உணர முடியும். மிகப்பெரிய உழைப்பு ஒன்று அதற்குத் தேவை. அந்த உழைப்பைக்கொட்டி, சாதித்திருக்கிறார், தமிழகத்தின் தங்க மகள் கோமதி மாரிமுத்து'. தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவுக்கு தனியார் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கண்ணீர்விட்டு பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் மேலும் அவர் பல வெற்றிபெறுவர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold medalist gomathi crying in private school function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->