உலகக்கோப்பை ஹாக்கி தொடர்... பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் ரூர்கேலாவில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி ஆடவர்களுக்கான 15ஆவது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி உட்பட 16 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரில் 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்றது.

அனைத்து லீக் போட்டி, காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பெல்ஜியம் அணி மற்றும் ஜெர்மனி அணி நேருக்கு நேர் மோதிய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியின் துவக்கத்தில் 2 கோல்களை அடித்த பெல்ஜியம் அணி முன்னிலை பெற்று இருந்த நிலையில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்த ஜெர்மனி அணி பெல்ஜியம் அணிக்கு பதிலடி தந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோள்கள் அடித்து ஆட்டம் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறைக்கு ஆட்டம் நகர்ந்தது. 

இதில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை வீழ்த்தி முன்னாள் சாம்பியன் ஜெர்மனி உலக கோப்பையை வென்றது. இதுவரை நடைபெற்ற 35 போட்டிகளில் 7 போட்டிகள் ராவில் முடிந்த நிலையில் 15 முறை பெல்ஜியமும் 14 முறை ஜெர்மனியும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Germany beat Belgium in Hockey World Cup Series final


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->