2011 உலகக்கோப்பை பைனலில் சதத்தை தவறவிட தோனியே காரணம்! கௌதம் காம்பிர் வெளியிட்ட சீக்ரெட்!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான தருணங்களில் எப்போதும் இடம்பெறுவது 28 ஆண்டுகளுக்கு பிறகு எம்எஸ் தோனியின் தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி பெற்ற ஒரு நாள் போட்டி உலக கோப்பை வெற்றி. இந்த பைனல் போட்டியில் சச்சின் ஷேவாக்கை விரைவாக இழந்து சறுக்கி இந்திய அணியை தூக்கி நிறுத்தியது கவுதம் காம்பீர். அவர் அடித்த 97 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி பாதைக்கு திரும்ப மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் அவர் 3 ரன்களில் சதத்தை நழுவ விட்டார் என்பது அப்போது ரசிகர்களுக்கு சிறு வருத்தமாகத்தான் இருந்தது. தற்போது அதற்கான காரணம் டோணி தான் என்பதை அவர் வெளியிட்டுள்ளார். 

எம்எஸ் தோனி தலைமையில் இந்திய அணி இரண்டு உலககோப்பைகளை பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு உலகக் கோப்பை பைனல் போட்டிகளில் இந்திய அணியின் தரப்பில் அதிக ரன்களை அடித்தவர் யார் என்றால்? கவுதம் காம்பீர் தான். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டு இடங்களிலுமே அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

20 ஓவர் உலக கோப்பை பைனல் போட்டியில் இந்திய அணி 156 ரன்கள் மட்டுமே எடுக்க அதில் 75 ரன்கள் குவித்த கௌதம் காம்பீர்க்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை. மாறாக 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் புதனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சச்சின் ஷேவாக்கை விரைவாக இழந்த இந்திய அணி கௌதம் காம்பீர் ஆட்டத்தினால் வெற்றியை நோக்கி நகர்ந்தது. அவர் 97 ரன்கள் அடித்த போதும் இந்தியனின் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த 91 ரன்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் அவர் அந்த மூன்று ரன்களை ஏன் அடிக்காமல் ஆட்டமிழக்க காரணம் என்பது குறித்து தற்போது தகவல் வெளியிட்டுள்ளார். அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஒரு ஓவர் முடியும் தருணத்தில் நானும் மகேந்திர சிங் தோனியும் பேசிக்கொண்டிருக்கும் போது, இன்னும் மூன்று ரன்கள் தான் உங்களுக்கு இருக்கிறது. அதை அடித்து விட்டால் நீங்கள் உங்கள் நூறை நிறைவு செய்து விடலாம் என்று அவர் நினைவுபடுத்தினார். அப்போதுதான் நான் எத்தனை ரன்கள் அடித்து இருந்தேன் என்பதை நான் கவனித்தேன். அது வரை இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை மட்டுமே நான் நோக்கி ஆடிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் அளித்த அந்த தகவல் இன்னும் 3 ரன்கள் இலக்கு என்பது என்னை தொந்தரவு செய்து விட்டது. ஆவேசமாக அவசரமாக 3 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியில் இறங்கி மோசமான ஒரு ஷார்ட் ஆடியதால் 97 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினேன். 

ஆட்டமிழந்து வெளியேறும் தருணத்திலும் எனக்கு அந்த 3 ரன்கள் உறுத்தியது. அது வாழ்நாள் வரை துரத்தும் என்பதனை உணர்ந்தேன். இன்றுவரை மக்களும் அதனை கேட்கிறார்கள் என காம்பிர் தெரிவித்துள்ளார். 

கௌதம் காம்பீர் அண்மையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிபி சீரிஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிக்கொண்டிருந்த சச்சின் சேவாக் கம்பீர் மூவரையும் சுழற்சி முறையில் களமிறக்கியதையும் கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது கவன சிதறலுக்கும் தோனி தான் காரணம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Ghambhir after 8 years reveals about 2011 world cup final innings


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->