புவனேஷ்வர் குமாரை தூக்கிட்டு, இவருக்கு வாய்ப்பு கொடுங்க... அதிரடியாக கூறிய கங்குலி.!! - Seithipunal
Seithipunal


10 அணிகள் பங்கேற்கும் 12 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த உலக கோப்பை தொடர் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்த உலக கோப்பை தொடரில் வேகப்பந்துவீச்சாளர் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வகையில் இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி  என மூன்று சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியவை, முகமது ஷமியை மாற்று வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தும் திட்டம் சரியில்லை.

முகமது ஷமி, ஐபிஎல் மட்டுமல்ல கடந்த ஆண்டு முழுவதுமே சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். நான் மட்டும் அணியின் கேப்டனாக இருந்தால், அவர்தான் அணியில் ஆடவைப்பேன். மேலும் புவனேஷ்வர் குமார் கடந்த 4-5  மாதங்களில் தன் பார்மில் பின்தங்கி இருக்கிறார். அவர் விரையில் மீண்டு வருவார் எனவே புவனேஷ்வர் குமார் மாற்று வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம். 

உலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி, ஹர்திக் பண்டியா ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganguly say chance the bhuvneshwar kumar in world cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->