வீரர்களை அறிவித்தார் கங்குலி! தோனிக்கு இடமில்லை, ரசிகர்கள் ஏமாற்றம்!  - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரகுமான் 100-வது ஆண்டை முன்னிட்டு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆசிய மற்றும் உலக லெவன் அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த போட்டிகள் ஆனது மார்ச் 18 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

இந்த போட்டிகளில் ஆசிய அணியின் சார்பாக இந்திய வீரர்களும் பங்கேற்க வேண்டுமென வங்கதேச கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து முன்னணி வீரர்களையும் கேட்டிருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் ஆசிய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகிய 4 பேரும் கலந்து கொள்வார்கள் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அறிவித்துள்ளார. 

வங்கதேச அணி தரப்பில் தோனி, கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, பும்ரா ஆகிய வீரர்கள் எதிர்பார்த்த நிலையில் சௌரவ் கங்குலி கோலியை தவிர மற்ற மூன்று விரர்களையும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் நான்கு வீரர்களை அறிவித்தாலும் இவர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவார்களா என்பதும் சந்தேகத்தில் தான் இருக்கிறது. 

ஏனெனில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி தொடரின் மூன்றாவது போட்டியானது மார்ச் 18ம் தேதி நடைபெறுகிறது. இதே தேதியில்தான் ஆசிய மற்றும் உலக லெவன் அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டியும் நடைபெற இருக்கிறது. அதனால் இந்திய வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் அவர்கள் உலக லெவன் அணிக்கு எதிரான ஆசிய லெவன் அணியில் முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது. 

அதே சமயம் இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை என்ற போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் அனைத்து வீரர்களும் விளையாடி கொண்டிருப்பதால் யாரும் ஆசிய அணிக்காக விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஆசிய லெவன் அணியில் வங்கதேச வீரர்கள் இலங்கை வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர்கள்  மட்டுமே விளையாடும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தொடரில் தோனி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விளையாடாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது, இல்லாமல் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganguly announced Indian players to ASIA XI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->