உலக கோப்பை அணியில் இருவரில் அவருக்கு மட்டும் தான் இடம்!! அதிரடியாக அறிவித்த கங்குலி!!  - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், உலக கோப்பையில் பங்கேற்கப்போகும் அணி குறித்து பல்வேறு கருத்துக்கள் உலாவுகின்றன. 

இதில் முக்கிய காரணியாக, அணியின் மாற்று விக்கெட் கீப்பர், மாற்று தொடக்க வீரர், மற்றும் வேகப்பந்து வீச்சாளர் போன்றவற்றை குறித்த எதிர்பார்ப்பு அதிகம் மேலோங்கியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் போன்றோர் மட்டுமே சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில், ஹர்டிக் பாண்டியாவிற்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைப்பது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. 

மீதமுள்ள ஜடேஜாவும், விஜய் சங்கரும் இருவரில் யார் என குழப்பதில் தேர்வு செய்யும் அணி உள்ளது. ஜடேஜாவும் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் இந்த குழப்பம் மேலோங்குகிறது. 

ஆனால், ஜடேஜாவை விட விஜய் சங்கருக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. மேலும், இருவருமே எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இருவரில் ஒருவரை தேர்வு செய்தால் விஜய் சங்கரை எடுக்கலாம் என கங்குலி கருத்து கூறியுள்ளார். 

விஜய் சங்கர் நாக்பூர் போட்டியில் அபாரமாக பந்துவீசினார். அப்பொழுதே அவர் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார். அவரையே அணிக்கு தேர்வு செய்யலாம் என கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால், இருவரையும் எடுக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

English Summary

Ganguli says about world cup team


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal