திடீர் ஒய்வு முடிவு!  இந்திய கிரிக்கெட்டிற்கு இது மாபெரும் அவமானம்!  இந்த முடிவுக்கு நீங்களே காரணம்! சோகமான தருணம்! - Seithipunal
Seithipunal


மும்பையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர், இந்திய அணியின் தேர்வுக்குழுவை கடுமையாக சாடினார். 

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை அணியில் இருந்து அம்பத்தி ராயுடு புறக்கணிக்கப்பட்டதால், அவசர அவசரமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். மேலும் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். 

இதுகுறித்து கௌதம் காம்பீர் கூறுகையில், இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரை தேர்வுக்குழுவினர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளார்கள். அவர்கள் முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என குற்றம் சாட்டி உள்ளார். ராயுடுவின் திடீர் ஓய்வுக்கு காரணம் அவர்கள் தான் எனவும், தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 

33 வயதான அம்பத்தி ராயுடு முதலில் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய இடத்தை விஜய் சங்கர், லோகேஷ் ராகுல் என இருவர் எடுத்துச் சென்றார்கள். இந்நிலையில் அணியின் அதிகாரப்பூர்வ காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப் பாண்ட் இங்கிலாந்துக்கு அனுப்ப பட்டார்கள். 

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் அடைந்த நிலையில் ரிஷப் பாண்ட்  அணியில் இணைக்கப்பட்டார்.  அதற்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் காயம் அடைந்த பொழுது, காத்திருப்போர் பட்டியலில் இடம்பெறாத இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடாத  மயங்க் அகர்வால் அணி கேட்டுக்கொண்டதற்கிணங்க தேர்வு குழுத் தேர்வு செய்துள்ளது. 

இதுதான் அம்பத்தி ராயுடு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  அணியை தேர்வு செய்த ஐந்து பேரின் வாழ்நாள் ரன்களை விட,  அம்பத்தி ராயுடு அடித்த ரன்கள் அதிகம். அவர்கள், ராயுடுவை ஓய்வு பெறச் செய்தது மிகவும் சோகமான ஒரு செயலாகும். இந்திய கிரிக்கெட் இது அவமானகரமான ஒரு தருணம் ஆகும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் அம்பத்தி ராயுடு ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார் என்றும்,  அதுவும் அவர் மூன்று சதங்கள் 10 அரை சதங்கள் என 47 ரன்கள் சராசரியுடன் விளையாடி உள்ளார். என்றும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1694 ரன்கள் குவித்துள்ளார்.  அவருடைய ஓய்வு இவ்வாறு அமைந்தது இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு அவமானம் எனவும் சோகமான ஒரு தருணம் எனவும், இதனை உருவாக்கிய தேர்வுக்குழுவினரை என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனவும் கம்பிர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gambhir blames selection committee for rayudu retirement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->