இந்திய அணியின் சாம்பியன் வீரர் மரணம்! கவாஸ்கர், சச்சின், கோலி ஆகியோர் உருக்கமான இரங்கல்!  - Seithipunal
Seithipunal


சாம்பியன் கிரிக்கெட் வீரர் ரஞ்சித் கோயல் என்பவர் தனது 77வது வயதில் நேற்று மரணம் அடைந்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த ரஞ்சித் கோயில் இந்திய அணிக்காக விளையாடவே இல்லை என்பது புரியாத புதிர்தான். ஏனெனில் அவர் 1957 58 ஆம் ஆண்டு சீசனில்  முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தவர் 750 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பந்துவீசும் ரஞ்சித் கோயல் 

அவர் 637 விக்கெட்டுகளை ரஞ்சி போட்டிகளில் மட்டும் எடுத்து இன்றுவரை ரஞ்சி போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய என்ற சாதனையை அவர் வசமே வைத்திருக்கிறார். அதற்கடுத்தபடியாக தமிழகத்தின் வெங்கட்ராகவன் 530 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாமிடத்தில் இருக்கிறார். 

1958 ஆம் ஆண்டு சீசனில் உள்நாட்டு கிரிக்கெட் அறிமுகமான ரஞ்சித் கோயல் அவருடைய 44-வது வயது வரை இந்திய உள்நாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். 1985 ஆம் ஆண்டு வரை விளையாடி அவர் அதன் பிறகு ஓய்வு பெற்றார் ஏறக்குறைய 27 வருடங்கள் விளையாடியுள்ள அவரை 2017 ஆம் ஆண்டு தான் பிசிசிஐ அவரை அங்கீகரித்து சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியது. 

வலது ஓரத்தில் ரஞ்சித் கோயல் 

அவருடைய மரணத்திற்கு தற்போதைய வீரர்களான கோலி, முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுள்கர் சௌரவ் கங்குலி உள்ளிட்ட வீரர்களுடன் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் கபில்தேவ் மதன்லால் பிஷன்சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரஞ்சித் கோயல் இந்திய அணிக்கு ஆடாதது குறித்து ஒருபோதும் வருத்தம் அடைய வில்லை எனவும்,  நான் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் விளையாடினால் போதும், எனக்கு பந்து வீசவில்லை என்றால் உறக்கம் வராது எனவும், நான் இவ்வளவு ஆட்டங்கள் விளையாடியதை நினைத்து பெருமையாக கூறுவார் என முன்னாள் வீரர்கள் அவருடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்கள். 

முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி உடன் ஆடியுள்ள ரஞ்சித் கோயல், பிஷன்சிங் பேடி கேப்டனாக இருக்கும் போது கூட அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பதுதான் துரதிஷ்டவசமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஒருமுறை அவரிடம் கேட்டபொழுது அப்போது இந்திய அணியில் பல சிறந்த பவுலர்கள் இருந்தனர் அதனால் எனக்கு இடம் கிடைக்கவில்லை என பெருந்தன்மையுடன் தெரிவித்ததாக கபில்தேவ் தெரிவித்துள்ளார். இதைப்போல சுனில் கவாஸ்கர் தன்னுடைய நினைவை பகிர்ந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former ranji player ranjit goel passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->