நூறு வயதை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்! சச்சின் கொண்டாட்டம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்தியாவின் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி தனது 100வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வர் என்ற பகுதியில் வசித்து வரும் வசந்த் ராய்ஜி, கடந்த 1920ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி பிறந்தார். இன்று 100வது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

9 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள  வசந்த் ராய்ஜி, 277 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சார்ட்டர்டு அக்கவுண்டன்டாக பணியாற்றிய வசந்த் ராய்ஜி, விக்டர் டிரம்பர், சி.கே. நாயுடு, எல்.பி. ஜெய் போன்ற கிரிக்கெட் வீரர்கள் குறித்த புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former indian cricketer celebrate his 100th birthday with sachin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->