ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தடுமாறிய இந்தியா,. சரிவிலிருந்து மீட்ட புஜாரா! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான நான்கு டெஸ்ட் தொடர்கள் நடக்க இருக்கிறது. இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 5;30 மணியளவில் தொடங்கியது. 

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுலும், முரளி விஜயும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில் கே.எல்.ராகுல் ஹஸுல்வுட் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த புஜாரா - முரளி விஜய் ஜோடி சேர்ந்தனர். உடனே முரளி விஜய் ஸ்டார்க் பந்து வீச்சில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களில் கம்மின்ஸ் அவரை அவுட் செய்து அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த ரஹானேவும் 13 ரன்களில் வெளியேற இந்திய 41 ரங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என அதிரடி காட்டியபோது லியானின் சுழல் பந்தில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த ரிஷப பண்ட் - புஜாராவும் ஜோடி சேர்ந்து ஆடிய போது, புஜாரா அரை சதத்தை கடந்தார். 25 ரன்களை  கடந்த போது ரிஷப பண்ட் லியன் கையில் அவுட் ஆக, பின்னர் வந்த அஷ்வின் பொறுமையாக ஆடிய போது 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு போர்ம் விக்கெட்டுகள் விழுந்தாலும் புஜாரா தனது பங்கிற்கு நிதானமாக ஆடினார். அடுத்து வந்த இஷ்ந்த சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தபோது சமி களமிறங்கினர். 

இந்நிலையில், பொறுமையாக ஆடிய புஜாரா தனது 16வது சதத்தை அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 123 ரன்கள் எடுத்தபோது கம்மின்ஸ் அவரை ரன் அவுட் செய்தார். இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 250 ரன்னுக்கு 9 விக்கெட்டுகள் இழந்திருந்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் இருந்து ஸ்டார்க், ஹஸுல்வுட், கம்மின்ஸ், லியோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

English Summary

First Test against Australia: Pujara to retire from the Indian side


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal