மருத்துவமனையில் இருந்த டூபிளசிஸ்! தற்போதைய நிலை என்ன?! வெளியான டுவிட்!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வந்த தென்ஆப்ரிக்க அணியின் பாப் டூ பிளசிஸ் பீல்டிங் இன் போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் விடுதிக்கு திரும்பியதாக தெரிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீரரான டூ பிளசிஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்தை எல்லைக் கோட்டின் அருகே தடுக்க முயன்றார் டூ பிளசிஸ்.

அப்பொழுது அவருக்கு நேர் எதிரே வந்த மற்றொரு வீரரின் கால் முட்டியில் டூ பிளசிஸ் கழுத்தானது பலமாக மோதிக்கொண்டால் நிலைகுலைந்த இவர் அங்கேயே சரிந்து கீழே விழுந்தார்.

பின்னர் சோதனை செய்ததில் தொடர்ந்து விளையாட முடியாது என அறிந்ததும் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்று நலமுடன் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து விடுதிக்கு திரும்பிவிட்டதாக அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், "எனக்கு ஆதரவாக வாழ்த்தி அனுப்பிய அனைத்து செய்திகளுக்கும் நன்றி. நான் மீண்டு வருகிறேன். அடிபட்டதால் ஞாபக மறதி ஏற்பட்டது. ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன்என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Faf du plesis tweet about his health after got treatment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->