கோடிகளை கொட்டியவர்களை விட, லட்சத்தில் உயர்ந்து நின்ற சிஎஸ்கே! அரங்கமே அதிர்ந்த அந்த அற்புத தருணம்!    - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2021 சீசனுக்கான மினி ஏலம் ஆனது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்திற்காக 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அதில் 292 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அவர்களில் 61 இடங்களுக்கான ஏலம் இன்று நடைபெற்றது. 

இந்த ஏலத்தில் பிரமிக்க வைக்கும் வகையில் பல வீரர்கள் 10 கோடிக்கும் மேலாக சென்றது ஆச்சரியமளித்தது. அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக கையில் ஜமிசன், ஜெய் ரிச்சர்ட்சன், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் 14 கோடிகளை தாண்டி ஏலம் சென்றார்கள். 

இதுபோன்ற ஆச்சரியங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கோடிகளைக் கொட்டி ஆச்சரியத்தை கொடுத்த அணிகளை விட, வெறும் 50 லட்சத்தில் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்ட இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் நட்சத்திர வீரர் புஜாராவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அவரை தேர்வு செய்தவுடன் அனைத்து அணியின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்களும் உட்பட அரங்கமே கரகோஷத்தை எழுப்பினார்கள். 

கடந்த 7 வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் சத்தீஸ்வர் புஜாரா,  நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தகுதி உள்ளவன் தான், என்னால் சிறப்பாக விளையாட முடியும் என தொடர்ந்து கூறி வந்தார், ஆனாலும் அவரை எந்த அணியும் தேர்வு செய்வதற்கு முன்வரவில்லை. இன்றும் அவரை எந்த  அணியும் தேர்வு செய்ய முன்வராத நிலையில், சூப்பர் கிங்ஸ் மட்டும் தேர்வு செய்தது. 

புஜாராவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புஜாராவை தேர்வு செய்யும்போது அரங்கத்தில் உள்ள அனைவரும் கைதட்டிய வீடியோவினை ஐபிஎல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Everyone open eyes when CSK picked pujara


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->