நேற்று நடந்த போட்டியில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா?.! நீங்கள் அறியாத அந்த ஒரு விஷயம்.!!  - Seithipunal
Seithipunal


உலக கோப்பைக்கான போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அனைத்து அணிகளும் உலக கோப்பையை வெல்வதற்காக கடுமையான பயிற்சியை எடுத்து கொண்டு., வெற்றி என்ற இலக்கை நிர்ணயம் செய்து விளையாடி வருகின்றனர். 

இந்த நிலையில்., இங்கிலாந்து அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான ஆட்டமானது நேற்று சவுதாம்பட்டனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் துவக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதனையயடுத்து முதலில் களமிறங்கிய வேஸ்ட் இண்டீஸ் அணியானது ஆட்டத்தின் துவக்கத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து நிலை தடுமாறியது. இதில் நிகோலஸ் பூரன் மட்டும் சத்தத்தை கடந்த நிலையில்., சுமார் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டும் குவித்தது. 

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியானது துவக்கத்திலேயே அதிரடியாக பேட்டிங்கில் செயல்பட்டது. இந்த ஆட்டத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் இந்த உலக கோப்பைக்கான இரண்டாவது சத்தத்தை பதிவு செய்து சாதனையை படைத்தார். 

இந்த போட்டியில்., இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தால் 33.1 ஓவர்களில் சுமார் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது., இந்த போட்டியின் முடிவில் ஜோ ரூட் சரியாக 100 ரன்களும்., பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றியை கொண்டாடினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eng vs wi match joe root second century in world cup match for this season


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->