உலகக்கோப்பையில் இந்திய தோற்றாலும்., கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த டோனி!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நேற்று  நடைபெற்ற உலககோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மோதின  நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் சுருண்டு 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டோனி கடைசி வரை போராடினார். ஆனால் 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார்.

நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டி டோனிக்கு 350வது போட்டியாகும். இதன்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பத்தாவது  வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 

மேலும் இந்திய அணியை பொறுத்தவரை சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் எனும் பெருமையை டோனி பெற்றார். குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை டோனி படைத்துள்ளார். 

டோனிக்கு முன்னதாக இலங்கை அணியின் சங்ககரா டோனியை விட அதிகமாக 360 ஒருநாள் போட்டிகளில் பங்குப் பெற்றாலும், 44 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்குப்பெறவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை டோனி படைத்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய டோனி  200 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் டோனி படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doni new world record in world cup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->