பொது இடம் என்றுகூட பார்க்காமல், தனது மனைவிக்காக தோனி செய்த ஆச்சரிய செயல், வைரலாகும் புகைப்படத்தால் கொண்டாடும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை எதார்த்தமாக பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி. எந்த சூழ்நிலையிலும் அன்பாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள கூடிய தோனிக்கு ரசிகர்களின் மனதில் எப்போதும் தனிஇடம் உண்டு. மேலும் அமைதியாக இருந்து பல சாதனைகள் செய்த இவர்’ கூல் கேப்டன்’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். 

மேலும் தோனி சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, சிறந்த கணவன், தந்தையும் கூட.  இந்நிலையில் தற்போது கிரிக்கெட்டில் இருந்து சிறிய ஓய்வில் இருக்கும் தோனி, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தோனி அவர் குடும்பத்தின் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளார்.

                                                                                                                                                                                                               

தோனி தனது மகள் ஸிவா உடன் சாப்பிடுவது, நடனம் ஆடுவது, மைதானங்களில் கொஞ்சி மகிழ்வது, அவருக்கு பணிவிடைகள் செய்வது போன்ற ஏராளமான வீடியோக்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி உள்ளது. 

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சாக்ஷியின் ஷூவிற்கு தோனி லேஸின் முடிச்சைப் போடுகிறார். அந்தப் பதிவில், ”நீங்கள் தான் ஷூக்களை வாங்கி தந்தீர்கள். எனவே நீங்கள் தான் லேஸைக் கட்டி விட வேண்டும்” என்றும் சாக்‌ஷி குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் இதை கண்ட ரசிகர்கள் 'அழகான ஜோடி’, உங்களுக்குத் தலை வணங்குகிறேன் மாஹி’,  ‘நீங்கள் இப்படி செய்யாதீர்கள் மாஹி பிறகு நாங்களும் செய்ய வேண்டிவரும்’ எனப் பலரும்  தங்களது  கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni tie shoelace to his wife sakshi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->