அந்த 2 பேர் இல்லிங்க, அதான்., தோல்வி குறித்து தல தோனி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 47 வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

அதன்படி, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்வாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல், அதிரடியாகவும், நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடி செஞ்சுரி (101) அடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூ ப்ளசி 25 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி தனது அதிரடி ஆட்டத்தால் 21 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அம்பத்தி ராயுடு 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜடேஜா மைதானத்தில் அனல்பறக்க வைத்தார். 15 பந்துகளில் 35 ரன்களை விளாசி அணியின் ரன்னை உயர்த்தினார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, சென்னை அணியின் பந்து வீச்சை கிழித்து எடுத்து.  

12 பந்துகளை சந்தித்த எவின் லீவிஸ் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 27 ரன்களை விளாசி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 19 பந்தில், 3 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

சஞ்சு சாம்சன் உடன் கை கோர்த்த சிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் அரைசதம் கண்டார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் தன் பங்குக்கு பவுண்டரிகளை விலாச., அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 165 ரன்களை தொட்டது.

கிட்டத்தட்ட ராஜஸ்தான் அணி வெற்றிபெறுவது உறுதியான நிலையில், சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில் 18.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிவம் துபே 64 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவிக்கையில், "முதலில் நாங்கள் டாஸை இழந்தது இந்த தோல்விக்கு முக்கிய காரணம். 190 ரன்கள் எங்களுக்கு நல்ல ஸ்கோர்தான். பனியின் தாக்கம் இருந்ததால், பந்து சீரான வேகத்தில் பேட்டிற்கு வரத் தொடங்கியது. இத்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர், பந்துகளை எதிர்கொள்ளும்போதே அதற்கேற்ப பேட்ஸ் மேன்கள் விளையாட வேண்டும். ராஜஸ்தான் அணியினர் பிட்சை சரியாகக் கணித்தனர். சரியாக ஆடினர்.

எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், பிராவோ இருந்திருந்தால் நிலையை சரியாக கணித்து, சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். அவர்கள் இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்பு. நாங்கள் இந்த ஆட்டத்தை மறந்துவிட்டு,இதிலிருந்து பாடம் கற்றுகொள்ள வேண்டும்" என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni say about CSK VS RR Match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->