உலககோப்பை தொடருடன் தோனி ஓய்வு? அதிரடியாக பதில் அளித்த தேர்வுக்குழு தலைவர்! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு ஜூன் மாதம் உலக கோப்பை தொடரானது இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் அணியை தயார்படுத்தி வருகிறது.  

இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு இதுதான் கடைசி உலககோப்பை தொடர் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று. மேலும் இந்த உலககோப்பை தொடருடன் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என பல செய்திகள் வெளியாகி வருகிறது.

2019 உலகக்கோப்பை பின்னர் தோனி ஓய்வு பெறுவாரா என செய்தியாளர்கள் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் தோனியின் ஓய்வு குறித்து  நாங்கள் முடிவு செய்யவில்லை, அதுகுறித்து ஆலோசிக்கவோ இல்லை. மிகப்பெரிய தொடரான  உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கும் முன்னர் அதனைப் பற்றி பேசினால், ஆட்டத்தில் இருந்து தோனி கவனம் சிதறும். அனைவரது பார்வையும் உலக கோப்பை தொடரின் மீது இருப்பதால் அதனை பற்றி யோசிப்பது இல்லை என்று கூறினார்.

English Summary

dhoni retirement in world cup 2019


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal