தோனி! தோனி! பயிற்சிக்கே இந்த அலப்பறையா?! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


சென்னையில், நேற்று ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியினர் பயிற்சியைத் தொடங்கினர்.

உலகக்கோப்பைக்கு பின் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை நிறுத்தியிருந்தார் தோனி. பின்னர், நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கிறார். இந்த மாதம் 29ஆம் தேதி 13வது ஐபிஎல் டி20 போட்டி தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில், அதற்கான முதல்கட்ட பயிற்சியில் சிஎஸ்கே அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக நேற்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தார். அவருக்கு ரசிகர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர். தோனியுடன் சேர்ந்து பியூஷ் சாவ்லா, அம்பதி ராயுடு, முரளி விஜய், கரண் சர்மா, சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதை தொடர்ந்து, தோனி காலில் பேட் கட்டிக்கொண்டு முதல் ஷாட்டை அடித்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி என்று ஆரவாரத்துடன் விசில் அடித்து மைதானத்தை அதிரவைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni practice in chepauk stadium


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->