தான் சொன்னபடியே பணிக்கு சென்ற தோனி!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பையில் விளையாடிய தோனி அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் சிறப்பாகவே செயல்பட்டாலும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். இதனையடுத்து உலகக்கோப்பை தோல்விக்குப் பின் தோனி ஓய்வு  பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் இந்திய அணியின் மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்கு நான் தயராக இல்லை தோனி என அறிவித்தார். நேற்று நடந்த தேர்வுக் குழு கூட்டத்திற்கு முன்னதாக பிசிசிஐக்கு தனது முடிவை தெரிவித்தார். "தோனி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு செல்லாமல் அவர் இந்திய துணை ராணுவ படைப்பிரிவுடன் இரண்டு மாதங்கள் செலவிடவுள்ளார்" பிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் ஒரு கெளரவ லெப்டினன்ட் கர்னல், ஆக தோனி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்க்கு பிறகு போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்த தகவல் இல்லை. 

இதையடுத்து, இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற கோரிக்கை வைத்த தோனிக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விக்டர் படையுடன் தோனி நேற்று இணைந்தார். அவர் ஆகஸ்ட் 15 ஆம்  தேதி வரை, ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணியில் ஈடுபடவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni join in indian army


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->