ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தீபக் ஹூடா.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் நான்காவது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல்-மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார். 

மயங்க் அகர்வால் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இதையடுத்து இறங்கிய கிறிஸ் கெயில், 28 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன், 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த தீபக் ஹூடா  28 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் கடைசி ஓவரில் அவர் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 221 ரன்களை எடுத்தது. 

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் ரன் குவிப்புக்கு தீபக் ஹூடாவின்  அதிரடி முக்கிய காரணம். அவர் 20 பந்தில் ஒரு பவுண்டரி 6 சிக்சருடன் அரை சதம் விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர் ஒருவர், 23 பந்திற்குள் இரண்டு முறை அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepak hooda new record in ipl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->