உமேஷின் பவுன்சரில் நிலைகுலைந்த வீரர்! விரைவாக சூழ்ந்து பரிசோதித்த இந்திய வீரர்கள்!  - Seithipunal
Seithipunal


இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவின் இரட்டை சதம், அஜிங்கிய ரஹானேவின் சதம், ஜடேஜாவின் அரைசதம் கைகொடுக்க 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மூன்றாவது நாளான இன்று ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டூ பிளசிஸ் அவுட்டாக அதிர்ச்சிகாத்து இருந்தது. மிக சிறப்ப மிக சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஷமி, ஜடேஜா, நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 335 ரன்களை  முன்னிலையாக, பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியையே மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது. 

கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா பாலோ ஆன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பாலோ ஆன் கொடுக்க எப்போதும் யோசிக்கும் கோலி இன்று தென்னாபிரிக்க அணியை உடனடியாக  இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட அழைத்தார். அப்படி இறங்கிய தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் முகமது ஷமி, உமேஷின் வேகத்தில் நிலைகுலைந்தது.

தேநீர் இடைவேளைக்கு முன் தென் ஆப்பிரிக்க அணி 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியை விட 309 ரன்கள் பின் தங்கி இருந்தது. அப்போது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் தென்னாபிரிக்க வீரர் டீன் எல்கர் தலையில் அடி வாங்கியதில் நிலைகுலைந்து போனார். கீழே சரிந்த அவரை உடனடியாக சூழ்ந்த இந்திய வீரர்கள் அவரை பரிசோதித்தனர். 

அவர் நினைவுடன் இருந்ததால் பதற்றம் தணிந்தது. அதோடு தென்னாபிரிக்க அணி மருத்துவர்களின் உதவியுடன் வெளியேறினார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் பேட் செய்ய வருவார் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dean elgar injured umesh yadav bouncer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->