விரைவில் ஒய்வு பெறுகிறார் தொடக்க ஆட்டக்காரர்! ஷேவாக்கிடம் ஆலோசனை பெற்றதாக தகவல்!  - Seithipunal
Seithipunal


தற்போது கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளிலும் ஆடுவது பற்றியும் அதனால் ஏற்படும் உடல், மன ரீதியான அழுத்தங்கள் குறித்தும் விரேந்திர சேவாக், டிவில்லியர்ஸிடம் பேசியதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.  தன் கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான முடிவை விரைவில் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடவும், டி20யிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்க டேவிட் வார்னர் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார். 

டேவிட் வார்னர் சிறந்த வீரருக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலன் பார்டர் பதக்கத்தை மூன்றாவது முறையாக வென்றார். மேலும் ஆண்டின் சிறந்த டி20 வீரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தான்,  டேவிட் வார்னர், டி20 சர்வதேச போட்டிகள் பற்றி சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன், அடுத்தடுத்து உலகக்கோப்பை வேறு இருக்கிறது. அதனால் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறலாம் என்ற எண்ணம் தோன்றுவதாக கூறியுள்ளார்.

மேலும் அனைத்து வடிவங்களிலும் ஆடுவது பெரிய சுமையாக உள்ளது. அனைத்து வடிவங்களிலும் ஆடுபவர்களுக்கு வாழ்த்துகள் ஆனால் இது கடினமானது. இது குறித்து விரேந்திர சேவாக், டிவில்லியர்ஸ் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டேன் என கூறியுள்ளார். எனவே விரைவில் டி20 போட்டிகளிலிருந்து வார்னர் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

david warner will retire from one format of Cricket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->