இந்த ஐபிஎல் தொடரின் முதல் அரை சதம்! சென்னை அணி வெற்றி இலக்கை நோக்கி! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடி வருகின்றன.

சென்னை சூப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்திலேயே 4 ரன்களை அடித்து தனது அதிரடியா காட்டினார். அனால், ரோகித் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

மறு முனையில் அதிரடியாக ஆடிய டிகாக் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய சவ்ரப் திவாரி 42 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக லிங்கிடி 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து சென்னை அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிவருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 7 பந்துகளை சந்தித்து ஒரு ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் ஆடிவந்த ஷேன் வாட்சன் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த பாப் டு பிளஸ்சி - அம்பத்தி ராயுடு நின்று நிதானமாக ஆடி வருகின்றனர்.

பாப் டு பிளஸ்சி 34 பந்துகளுக்கு 38 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். அம்பத்தி ராயுடு 45 பந்துகளுக்கு 69 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். சற்றுமுன்பு வரை சென்னை அணி 15.1  ஓவர்களை, 117 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk vs mi 2nd half match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->