அவனை தூக்கி வெளிய போடுங்க?! சென்னை வீரரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!  - Seithipunal
Seithipunal


13வது ஐபிஎல் சீசன் தொடரின் நேற்றைய 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, போட்டி முடிந்த அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

"எங்களது அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் சிங்கள் ரன்கள், பவுண்டரிகள் எடுக்காதது எங்கள் அணிக்கு தோல்வியாக அமைந்துள்ளது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். இதனால் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது." என்று தோனி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த போட்டியில் இறுதி கட்டத்தில் களமிறங்கிய கேதார் ஜாதவ் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்தது சென்னை ரசிகர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. மேலும் சென்னை அணியின் தோல்விக்கு இவர்தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

கடந்த ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாதவ், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் 12 பந்துகளை சந்தித்த கேதார் ஜாதவ் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் 1 பவுண்டரியும் அடங்கும். அவர் சந்தித்த 12 பந்துகளில் 8 பந்துகளை வீணடித்து உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk player worst play


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->