ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் சச்சின் தொடர்ந்த அதிரடி வழக்கு.! காரணம் என்ன?.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி நகரில் அமைத்துள்ள ‘ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ்’ என்ற தனியார் நிறுவனமானது மட்டை பந்து விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்களை தயாரித்து வருகிறது. 

இந்த நிறுவனம் சச்சினுடன் ஒப்பந்தம் செய்து., அந்த ஒப்பந்தத்தின் படி சச்சினின் புகைப்படத்தை உபயோகம் செய்து வருடத்திற்கு ரூ.10 இலட்சம் டாலர்கள் தருவதாக கூறியுள்ளது. 

அந்த ஒப்பந்தத்தில்., இந்நிறுவனம் தயாரிக்கும் கிரிக்கெட் பேட்டுகளில் சச்சினின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து., அந்த தயாரிப்புகளுக்கு "சச்சின் பை ஸ்பார்ட்டன்" என்றும் பெயரிட்டது. 

இந்த நிறுவனத்தின் பங்குதாரராக இந்தியாவை சார்ந்த குணால் என்பவர் இருந்த நிலையில்., ஒப்பந்தத்தின் படி சச்சினுக்கு தரவேண்டிய தொகையை தராமல் அந்த நிறுவனமும் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதனால் எனது பெயரை உபயோகம் செய்ய கூடாது என்று சச்சின் கடந்த வருடத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்த சமயத்தில்., ஒப்பந்தத்தின் படி தனக்கு வழங்க வேண்டிய 30 இலட்சம் டாலர்களை தர வேண்டும் என்று கூறி., ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரின் நீதிமன்றத்தில் சச்சின் தற்போது வழக்கை தொடுத்துள்ளார். இது குறித்த விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player sachin tendulkar file case in Australia about agreement problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->