இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டியா? தகவலை வெளியிட்ட கங்குலி.! - Seithipunal
Seithipunal


இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கிரிக்கெட் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் அனுமதியளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி தெரிவித்துள்ளார். 

நேற்று முன் தினம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி, வரும் 23 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். முன்னாள் இந்திய அணியின் கேப்டனான கங்குலி தலைமையில் இந்திய அணி, கடந்த 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில,  கொல்கத்தாவில் செய்தியாளர் சந்தித்த பேசினார், அப்போது நிருபர் ஒருவர் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கேள்வி எழுப்பினர். கேள்விக்கு பதிலளித்த அவர் இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும்தான் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும் என தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்போது என்பதை பிரதமர் மோடியிடமும், இம்ரான் கானிடமும்தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்றும் கங்குலி பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket match for india vs pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->