சிறுவயதில் ஒன்றாக விளையாடிய நண்பர்கள்.,இன்று வெவ்வேறு நாட்டுக்காக எதிரிகளாக களமிறங்கிய சுவாரசியம்.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட்டில் களத்தில் மோதலும் களத்துக்கு வெளியே நட்பும் வீரர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆஷஸ் தொடர் மிகவும் மோதல் போக்கு கொண்ட ஒரு தொடர். இதில் அந்தக் காலத்தில் எதிரெதிர் அணியைச் சேர்ந்த டெனிஸ் லில்லி, இயன் போத்தம் மைதானத்துக்கு வெளியே இன்று வரையிலும் மிகச்சிறந்த தோழர்களாக விளங்கினார்கள்.

அது போல்தான் டெனிஸ் லில்லி, விவ் ரிச்சர்ட்ஸ், ஷேன் வார்ன் - சச்சின் டெண்டுல்கர், இன்னும் எத்தனையோ கூற முடியும்.

பொதுவாக எதிரணி வீரர்களுடன் வளர்ந்தவுடன் களத்தில் மோதல் இருந்தாலும் வெளியில் நட்பு பாராட்டுவது பரவாலனதுதான், ஆனால் இரண்டு வீரர்கள் குழந்தைப் பருவத்தில் விளையாட்டுத் தோழர்கள், இருவரும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனால் ஆஷஸ் தொடரில் 2 வாரங்களுக்கு முன்பாக களத்தில் எதிரிகள்.

இது கொஞ்சம் அரிதுதான். அந்த இரண்டு வீரர்கள் யார் யார் என்றால் மிட்செல் மார்ஷும், இங்கிலாந்தின் சாம் கரனும்தான். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளப் பக்கத்தில் இரண்டு குழந்தைகள் பொம்மை காரை ஓட்டுவது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு, “15 வயதில் இந்த இருவரும் ஜிம்பாப்வேயில் சந்தித்தனர். ஆனால் 2 வாரங்களுக்கு முன்பாக இவர்கள் ஓவலில் ஆஷஸ் எதிரிகள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த இரண்டு வீரர்கள் மிட்செல் மார்ஷ், சாம் கரண் குழந்தைப்பருவத்தில் சேர்ந்து விளையாடியுள்ளனர். மிட்செல் மார்ஷ் தந்தை ஜெஃப் மார்ஷும், சாம் கரன் தந்தை கெவின் கரன் ஆகிய இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஜிம்பாப்வேயில் பயிற்சியாளராக இருந்த போது இருவரது வாரிசுகளான மிட்செல் மார்ஷ் மடியில் சாம் கரண் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் தான் இது.

இதே படத்தை சாம் கரண் 2 ஆண்டுகளுக்கு முன்பாக மிட்செல் மார்ஷ் சர்ரே அணியில் இணைந்த போது வெளியிட்டு நெகிழ்ச்சியடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Childhood Friends Play For Different Nations


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->