ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ் கெயிக்வாட், உத்தப்பா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2021-14வது சீசனின் முதல் தகுதி சுற்று நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. அந்த அணியில் பிரித்வி ஷா அற்புதமாக ஆடி 60 ரன்கள் எடுத்தார். ஹெட்மையர் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷாப் பண்ட் 51 ரன் எடுத்தார்.  சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரரான டுபிளசிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அவர் 44 பந்துகளில் 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஷர்துல் தாக்குர் களமிறங்கினார். ஆனால் அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, அம்பதி ராயுடு ஒரு ரன்னில் வெளியேறினார். 

ஒரு பக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டிருந்தது. ஆனால் மறுமுனையில் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு கேப்டன் தோனி களம் இறங்கி, பவுண்டரிகளை விளாசிய சென்னை அணியை இறுதி ஓவரில் வெற்றி பெற செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai super kings go to final


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->