இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம்! உலகக் கோப்பை தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படுமா? - Seithipunal
Seithipunal


பும்ராவுக்கு பதில் களம் இறங்கும் முகமது சிராஜ்!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா-தென்னாபிரிக்கா இடையான முதலாவது டி20 போட்டி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கான போட்டியில் பந்துவீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டிருந்தார். அடுத்து நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடர்களிலும் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 மாதங்கள் வரை பும்ராவால் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் அவர் தென் ஆப்பிரிக்கா எதிரான தொடர் மற்றும் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது இந்தியாவில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மாற்று வீரராக களம் இறக்கப்பட்டுள்ளார். இன்னும் உலக கோப்பையில் பங்கேற்கும் அணியில் பும்ராவுக்கு மாற்று வீரராக யார் சேர்ப்பது என்று முடிவு செய்யப்படவில்லை.

பும்ராவுக்கு மாற்று வீரர் போட்டியில் மூன்று பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த முகமது சமி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சகர், பும்ராவுக்கு மாற்று வீரராக களம் இறங்கியுள்ள முகமது சிராஜ் இவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 தொடரில் மாற்றுவீரராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Change in the Indian cricket team Will he be given a chance in the World Cup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->