இந்திய அணியில் யாருமே எதிர்பார்க்காத வீரர் அறிமுகம்! ரோஹித், தவான் நீக்கம்! வெளியான உத்தேச அணி! - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று டி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக் குழு இன்று கூடுகிறது. 

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் பணிச்சுமை, தேர்வுக் குழு கூட்டத்தின் போது முக்கிய விவாதமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடப்பு காலண்டர் ஆண்டில், அவர் 25 ஒருநாள், 11 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார், இது கேப்டன் கோலியை விட மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி 20 போட்டிகளில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் அவருக்கு ஓய்வும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகக் கோப்பையின் போது காயம் ஏற்பட்ட பின்னர் கிரிக்கெட்டுக்குத் திரும்பியதிலிருந்து சிறப்பாக ஆடாத மூத்த தொடக்க ஆட்டக்காரர் தவான் நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதேபோல டிசம்பர் 2 இல் திருமணம் நடக்க இருக்கும் மனிஷ் பாண்டே அணியில் இடம்பெற மாட்டார் என தெரிகிறது. 

வங்கதேச தொடரில் ஆடாத கோலி மீண்டும் கேப்டனாக களமிறங்குவார் என தெரிகிறது. அதேபோல பயிற்சியை தொடங்கியுள்ள தோனி இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அணியில் ரிஷப் பாண்ட், சஞ்சு சாம்சன் இருக்கும் நிலையில் தோனி இடம்பெறுவாரா என்ற கேள்வியும் உள்ளது. 

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பான டி 20 ஸ்பெஷலிஸ்ட் தீபக் சாஹர் வேகப்பந்துவீச்சுக்கு தலைமை ஏற்பார் என தெரிகிறது. முன்னணி வீரர்களான ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார்,  ஹர்திக் பாண்ட்யா மற்றும் நவ்தீப் சைனி இன்னும் காயங்களிலிருந்து மீளவில்லை. கலீல் அகமது சொதப்பினாலும் அவர் இருப்பார் என தெரிகிறது. ஆகியோர் சிவம் துபே மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணிக்கு புதிய வரவாக நீண்ட நாட்களாக உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடும் சூரியகுமார் யாதவ் மனிஷ் பாண்டேக்கு பதில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், தவான் இல்லாத நிலையில் அங்கே மயங்க் அகர்வால், ஷுப்மன் கில் களமிறங்க வாய்ப்புள்ளது. 

எதிர்ப்பார்க்கப்படும் T20 அணி : விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பாண்ட், மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்டியா, சிவம் துபே, யுஸ்வென்றே சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மத், ஷரதுல் தாகூர். 

ஒருநாள் அணி : விராட் கோலி, தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பாண்ட், தோனி, சூரியகுமார் யாதவ், ஜடேஜா, யுஸ்வென்றே சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், கலீல் அஹ்மத், முகமது ஷமி, ஷர்துல் தாகூர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance suryakumar make debut in india squad for west indies series


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->