இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெற்றியை, கொண்டாடிய மகளீர் அணி.! கொண்டாட்டத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆடியது. இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய காக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பல பெனல்ட்டி வாய்ப்புகளை  இந்திய அணி வாரி வழங்கிய போதும், அதனை நமது இந்திய அணியின் கோல்கீப்பர் சாதுரியமாக தடுத்து கோல் விழாமல், இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

குறிப்பாக ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு ஜெர்மனி அணிக்கு கிடைத்தது. அதனை கோல் விழாமல் தடுத்து இந்திய வீரர் பதக்கத்தை உறுதி செய்தனர். ஆட்டம் இருக்கை நுனியில் (சீட் எட்ஜ் மேட்ச்) நடந்தது என்று சொன்னால் மிகையாகாது.

இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பஞ்சாப் மற்றும் வடமாநிலங்களில் இந்திய ஹாக்கி அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல, இந்திய மகளிர் ஹாக்கி அணியும் இந்த ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த போது அவர்களும் இந்த வெற்றியை கொண்டாடினர். கடந்த 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அரையிறுதி போட்டியில் தோல்வி பெற்ற பிறகும், இந்திய அணி பதக்கத்தை வென்று மீண்டு இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. 

குறிப்பாக ஆடவர் அணியின் வெற்றியை பெண் மகளிர் அணியினர் நேரடியாக பார்த்து தங்களது மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்

இந்திய ஆடவர் ஹாக்கி அணி போலவே, மகளிர் ஹாக்கி அணியும் அரை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து, வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது. இந்திய மகளிர் ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்று இருப்பது, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது, நிச்சயம் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் வெண்கலப் பதக்கத்தை வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என்பது உறுதி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

celebration male hockey India


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->