ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் மாற்றம்! அதிஷ்டம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரட் ஹாட்டின் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகின்ற சீசன் முதல் அந்த அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ட்ராவர் பெய்லிஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது புதியதாக உருவாகியுள்ள பெய்லிஸ், ஹாடின் கூட்டணி வெற்றிகரமாக செயல்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த கூட்டணி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ஒன்றாக பணியாற்றவில்லை என்றாலும், இருவரும் ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக பங்காற்றியுள்ளார்கள். கொல்கத்தா அணிக்காக ஹாடின் விளையாடியுள்ளார். பெய்லிஸ் அந்த அணியின் பயிற்சியாளராகும் பணியாற்றி உளளர்கள். 

சர்வத சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஃபீலிங் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலிய ஏ அணியின் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார் பிரட் ஹாடின். மேலும் இந்த இருவரும் ஆஸ்திரேலிய பிக் பாஷ் போட்டியில், 2012 ஆம் ஆண்டு சிட்னி சிக்ஸர் அணி  சாம்பியன் பட்டம் வென்ற போது, ஒரே அணியில் பணியாற்றியது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.  அப்பொழுது சிட்னி சிக்ஸர் அணியின் பயிற்சியாளராக டிராவர் பெய்லிசும், கேப்டனாக ஹாடினும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வெற்றிக் கூட்டணியை நம்பி தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருவரையும் அணியின் பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brad Haddin appointed as assistant coach to SRH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->