இந்திய அணிக்கு அதிர்ச்சி.. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் இருந்து விலகிய நட்சத்திர வீரர்?! கோலி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


இந்தியா-பாகிஸ்தான் இடையே நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் 337 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பவுலர்களான புவனேஷ்வர், பும்ரா நேர்த்தியாக பந்துவீசினார்கள். 

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக், பாக்கர் ஜமான் நிதானமாக விளையாடினார்கள். ரன்ரேட் பெரிதாக செல்லவில்லை என்றாலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். 7 ஆவது ஓவரை புவனேஷ்வர் வீசிக்கொண்டிருக்கும் போதே, ஆடுகளம் வழுக்கியதால் காயமடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

அவர் காயம் பெரியதாக இருப்பின் இந்திய அணிக்கு நிச்சயமாக பின்னடைவாகவே இருக்கும். புவனேஷ்வர் வெளியேறியதால் அந்த ஓவரை நிறைவு செய்ய உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக களமிறங்கியுள்ள தமிழகத்தின் விஜய் ஷங்கர் அழைக்கப்பட்டார். 

இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெளியிட்ட அறிவிப்பில், தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் விளையாட மாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என கூறிய கோலி. ஏற்கனவே ஷிக்கர் தவான் காயத்தால் தற்காலிகமாக விலகி இருக்கம் நிலையில் புவனேஷ்வர் குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

bhubaneswar not played in next three matches


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal