ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் குறித்து பிசிசிஐ வெளியிட்ட புதிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி, ரசிகர்கள் இன்றி தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆரம்பித்த நிலையில், விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலவரையின்றி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 30 போட்டிகள் மீதமுள்ளது. இந்த போட்டிகள் எல்லாம் எப்போது எங்கு நடத்தப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தி இருப்பது, ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த வருடத்தின் இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடரும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடக்க இருப்பதால் பிசிசிஐ என்ன முடிவு செய்யும் என்பது பொறுத்திருந்து தான் தெரியவரும். கடந்த சீசனில் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 

அதேபோலவே மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை கடந்த ஆண்டு போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மீதமுள்ள போட்டிகளை வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க விட்டாலும், ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.போட்டிகளை நடத்த ஏற்கனவே UAE சென்றவிட்ட கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், விளையாடக்கூடிய இந்திய வீரர்கள்  உள்ளிட்டோரை வைத்து போட்டியை நடத்த இருப்பதாக பிசிசிஐ துணைக்கு தலைவர்  ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bcci says about ipl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->