உலகக்கோப்பை தோல்வி : கேப்டன் கோலி, கோச் ரவி சாஸ்திரி நீக்கமா? BCCI அதிரடி!  - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு, இந்தியாவின் உலகக் கோப்பை செயல்பாடு குறித்து, கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இருபது ஓவர் உலக கோப்பை போட்டிக்கான செயல்திட்டம் குறித்தும் கேட்டுள்ளது. 

குழுவின் தலைவர் வினோத் ராய், டயானா எடுல்ஜி மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) ரவி தோட்ஜ் தலைமையிலான கமிட்டி உறுப்பினர்களும், அணி தேர்வாளர்கள் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் உடன் கலந்துரையாடுவார்கள் என தெரிகிறது. 

"பயிற்சியாளரும் கேப்டனும் இந்தியா வந்த பிறகு, ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு, நாங்கள் நிச்சயமாக ஒரு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அவர்களுக்கு ஒரு தேதியையும் நேரத்தையும் வைக்க மாட்டோம், ஆனால் நாங்கள் அவர்களிடம் பேசுவோம்" என வினோத் ராய் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். 

"இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் இப்போது முடிந்துவிட்டது. அடுத்து என்ன என்பதனை இப்போது நான் உங்களுக்குச் எப்படி சொல்ல முடியும்" என்றும் செய்தியாளர்களிடம் ராய் கூறினார்.

கோச் சாஸ்திரி, கேப்டன் கோஹ்லி மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் சில கேள்விக்கு பதிலளிக்கும் வேலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முதல் கேள்வியாக, உலககோப்பைக்கு முன்பான இறுதித் தொடர் வரை அம்பதி ராயுடு அணியில் ஏன் நீடித்தார், குழு நிர்வாகமோ அல்லது தேர்வாளர்களோ நான்காவது இடத்திற்கு அவர் சரியானவர் தான் என்பதனை ஏன் நம்பவில்லை? 

இரண்டாவதாக, அணியில் ஒரே நேரத்தில் மூன்று விக்கெட் கீப்பர்கள் எதற்காக இருந்தனர். குறிப்பாக தினேஷ் கார்த்திக், ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சிறப்பாக விளையாடாத நிலையில் மேலும் மோசமான ஐ.பி.எல். செயல்பாட்டுக்கு பிறகும் ஏன் இறக்கினீர்கள்?

மூன்றாவதாக, நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் மகேந்திர சிங் தோனி ஏன் ஏழாவது இடத்தில் அனுப்பப்பட்டார்? பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தான், தோனியின் இடத்தைப் பற்றி முடிவு செய்தார் எனில் தலைமை பயிற்சியாளரை கேட்காமல் அவர் எப்படி முடிவு எடுத்தார்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

தற்போதைய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு பி.சி.சி.ஐ ஆண்டு கூட்டம் வரை தொடரும், அதே வேளையில், தேர்வாளர்களின் தலைவர் தேர்வுக் கூட்டங்களில் அதிக உறுதியுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI questioned Coach Ravi sasthri, captain Kohli


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->