ஒரு நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி - பும்ரா குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


 

அடுத்த மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை டி20 தொடரில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி மறுப்பு தெரிவித்து, இதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் விளையாடாமல் இருந்த இந்தியாவில் வேக பந்துவீச்சாளர் பும்ரா, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்தார். நேற்று முன்தினம் முதல் ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென்னாபிரிக்க டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், அந்த காயம் குணமடைய சுமார் 4 மாதம் முதல் ஆறு மாதம் வரை ஆகலாம் என்ற தகவலும் வெளியாகியது. இதனால் அவர் வருகின்ற டி20 உலக கோப்பை தொடரில் இடம்பெற மாட்டார் என்ற தகவலும் தீயாக பரவியது.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், "டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் தேவை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கங்குலியின் கூற்றுப்படி தொடரில் விளையாடலாம், அல்லது விளையாடாமல் போகலாம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதை தெரிவிக்கிறது. 

ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும், நம்பிக்கை உரிய ஒரு ஆல்ரவுண்ட் வீரராகவும் திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கும் நிலையில், இந்திய அணியின் மற்றும் ஒரு முக்கியமான, ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தும் பும்ரா இடம்பெருவாரா? மாட்டாரா என்ற சந்தேகம் தொடர்ந்து வலுத்து வருகிறது.

கடந்த சில வருடங்களாக இந்திய அணி பல தொடர்களை கோட்டை விட்டு வரும் நிலையில், இந்த டி20 தொடரை வென்றால், இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும். ஆனால் இப்படி நட்சத்திர வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடரிலிருந்து விலகினால் என்ன ஆகுமோ?
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI President Ganguly said Bumrah T20 World Cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->