பாண்டியா, ராகுல் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை.! பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் பரிந்துரை.!! - Seithipunal
Seithipunal


பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “காபி வித் கரண்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் அவர்கள் பேசும்போது பாண்டியா பெண்களை ஒரு பொருள் போல எண்ணி சில கருத்துகளை கூறினார். அது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.மேலும் அதற்கு பலரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது

அதனை தொடர்ந்து கேள்வி, பதில் சுற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இவர்களில் யாா் சிறந்த பேட்ஸ்மேன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சிறிதும் தாமதமின்றி ராகுலும், பாண்டியாவும்  விராட் கோலி என்று பதில் அளித்தனா். இதனால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிரான கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தனர்.


 

இதனை தொடர்ந்து ஹா்திக் பாண்டியா தனது பதிலுக்காக விளக்கமும், மன்னிப்பும் தொிவித்துள்ளாா். இது தொடா்பாக சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், “நான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. எனது பதில்கள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தாா்.


 

மக்கள் மத்தியில் பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய ஹர்திக் பாண்டியாவும், அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து பிசிசிஐ க்கு விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை ஹர்திக் பாண்டியா சமர்பிர்த்தார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் விளக்கத்தில் திருப்தியடையாத பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் 2 போட்டிகளில் ஆட தடை விதிக்க வேண்டும் என்று. பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்துள்ளார். 
 

English Summary

bcci head open talk about hardik pandya issue


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal